Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA : “வெற்றியுடன் நாடு திரும்புவோம்” …..! விராட் கோலி அதிரடி பேச்சு ….!!!

தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான தொடரில் பங்கேற்கும்  இந்திய அணி வீரர்கள் தனி விமானம் மூலம் தென் ஆப்பிரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர் .

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது .இதில் டெஸ்ட் அணியின் கேப்டனாக விராட் கோலியும் ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில்  தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் மும்பையில் தனிமைப்படுத்தப்பட்டு பயிற்சி மேற்கொண்டு வந்தனர் .இந்நிலையில் பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக டெஸ்ட் தொடரில் இருந்து ரோகித் சர்மா விலகியுள்ளார்

இந்த நிலையில் இன்று அதிகாலை இந்திய அணி வீரர்கள் தென் ஆப்பிரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர் .இது குறித்த புகைப்படங்களை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது .இந்நிலையில் தென்னாப்பிரிக்கா செல்வதற்கு முன்பாக டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டார். அப்போது அவர் கூறும்போது, “எனக்கும் ரோஹித் சர்மாவுக்கும் எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது .மேலும் தென் ஆப்பிரிக்காவில் இதுவரை டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்றதில்லை .இம்முறை நிச்சயம் வெற்றியோடு நாடு திரும்புவோம் “என அதிரடியாக பேசியுள்ளார்

Categories

Tech |