Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA : தொடரை வெல்லப்போவது யார் ….? 3-வது டெஸ்ட் இன்று தொடக்கம்….!!!

இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் இன்று தொடங்குகிறது.

இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் முதல் டெஸ்ட் போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவும், 2-வது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்நிலையில் தொடரை வெல்லப்போவது யார்  என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் இன்று தொடங்குகிறது. இதில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டது.குறிப்பாக பேட்டிங்கில் கே எல் ராகுல் சிறப்பாக விளையாடி சதம் அடித்து அசத்தினார் அதேபோல் பந்துவீச்சில் முகமது ஷமி 8 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.

ஆனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங்  எதிர்பார்த்தபடி அமையவில்லை. அதேசமயம் 2-வது டெஸ்ட் போட்டியில் முதுகுவலி காரணமாக கேப்டன் விராட் கோலி விலக்கினார். இதனால் அப்போட்டியில் கே.எல்.ராகுல் கேப்டனாக செயல்பட்டார். அதேசமயம் இந்திய அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நிலைத்து ஆட வேண்டியது அவசியமாகும். இதையடுத்து தென்னாபிரிக்க அணியை பொறுத்தவரை பேட்டிங்கில் கேப்டன் டீன் எல்கர் , தெம்பா பவுமா , கீகன் பீட்டர்சன் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். அதேபோல் பந்துவீச்சிலும் காஜிசோ ரபடா, லுங்கி இங்கிடி, மார்கோ ஜான்சென்  ஆகியோர் சிறப்பாக செயல்படுகின்றனர்.இதில் 2-வது போட்டியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா அணி அதே நம்பிக்கையுடன் இன்றைய போட்டியில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நேரப்படி இப்போட்டி இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது.

Categories

Tech |