தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 26-ஆம் தேதி தொடங்குகிறது. இதற்காக விராட் கோலி தலைமையிலான 18 பேர் கொண்ட இந்திய அணி வீரர்களின் பட்டியலை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது.
இதில் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டனாக செயல்பட்டு வந்த ரகானே நீக்கப்பட்டு ரோஹித் சர்மாவுக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்திய அணி : விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (து.கேப்டன்), கே. ராகுல், மாயங்க் அகர்வால், புஜாரா, ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட், சாஹா, அஷ்வின், ஜெயந்த் யாதவ், இஷாந்த் சர்மா, மொஹம்மது ஷமி, உமேஷ் யாதவ், பும்ரா, ஷர்துல் தாகூர், முகமது சிராஜ்.