இந்தியா -தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் புதிய சாதனை ஒன்றை படைக்க உள்ளார் .
தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 26-ம் தேதி நடைபெற உள்ளது.இந்நிலையில்இந்திய அணி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் புதிய சாதனை ஒன்றை படைக்க உள்ளார் .அதாவது டெஸ்ட் போட்டியில் கேட்ச் மற்றும் ஸ்டம்பிங் மூலம் 25 டெஸ்ட் போட்டிகளில் 97 முறை (89 கேட்ச் மற்றும் 8 ஸ்டம்பிங்) அவர் அவுட் செய்துள்ளார்.
இதற்கு முன்னதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி 36 போட்டிகளில் இந்த சாதனையை படைத்துள்ளார். இதனால் தோனியின் சாதனையை தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் ரிஷப் பண்ட் முறியடித்து புதிய சாதனை படைப்பதற்காக வாய்ப்புள்ளது. மேலும் ரிஷப் பண்ட் இந்த சாதனையை படைக்கும் பட்சத்தில் குறைந்த வயதில் இந்த மைல்கல்லை எட்டிய வீரர் என்ற பெருமையையும் அவர் பெறுவார்.