இந்தியா -தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது .
தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3-வது டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை செஞ்சூரியனில் நடைபெறுகிறது .இது ‘பாக்சிங் டே’ டெஸ்ட் என்றே அழைக்கப்படுகின்றது .
அதேசமயம் தென்னாபிரிக்காவின் கோட்டை என வர்ணிக்கப்படும் செஞ்சூரியனில் இதுவரை எந்த ஒரு அணியும் வெற்றி பெற்றது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது .கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவை தோற்கடித்த இந்திய அணி, இம்முறை தென்னாப்பிரிக்காவை வீழ்த்துமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்திய நேரப்படி இப்போட்டி நாளை பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது .இப்போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.