Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA : ஒருநாள் தொடரிலிருந்து கோலி விலகலா ….? வெளியான முக்கிய தகவல் ….!!!

தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விராட் கோலி விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இத்தொடரில் பங்கேற்பதற்காக மும்பையில் முகாமிட்டு உள்ள இந்திய அணி வீரர்கள் பயோ பபுளைபின்பற்றி பயிற்சி மேற்கொண்டு வருகின்றன .

இதில் காயம் காரணமாக தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து ரோகித் சர்மா விலகியுள்ளார். இந்நிலையில் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விராட் கோலி விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பாக ஒருநாள் அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி சமீபத்தில் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |