Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA ஒருநாள் தொடர் : இந்திய அணியில் ஜெயந்த், நவ்தீப் சைனி சேர்ப்பு ….!!!

தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ஜெயந்த், நவ்தீப் சைனி சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தியா – தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு இரு அணிகளுக்கிடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. இதில் முதல் ஒருநாள் போட்டி வருகின்ற 19ஆம் தேதி பார்ல் நகரில் தொடங்குகிறது.

இதில் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு கொரோனா தொற்று உறுதியாகியதால் அவர் இத்தொடரில் இருந்து விலகியுள்ளார். இதனால் அவருக்கு பதிலாக  ஜெயந்த் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதேபோல் முகமது சிராஜ் தசைப்பிடிப்பால் அவதிப்பட்டு வருவதால் அவருக்கு பதிலாக அணியில் நவ்தீப் சைனி சேர்க்கப்பட்டுள்ளார்.

Categories

Tech |