தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது .
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இந்நிலையில் இத்தொடர் முடிந்தபிறகு இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறுகிறது .இதில் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார்.ஆனால் காயம் காரணமாக அவர் இத்தொடரில் இருந்து விலகியதால் அவருக்கு பதிலாக அணியின் கேப்டனாக கேஎல் ராகுலும், துணைக் கேப்டனாக பும்ராவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இத்தொடருக்கான கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஐபிஎல் மற்றும் உள்நாட்டு தொடரில் சிறப்பாக விளையாடிய இளம் வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் , வெங்கடேஷ் அய்யர் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். அதேபோல் விராட் கோலி ரிஷப் பண்ட் ஆகியோர் 9 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ஒருநாள் தொடரில் இடம் பிடித்துள்ளனர் .