தென்ஆப்பிரிக்கா அணிக்கெதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் கேப்டன் விராட் கோலி பங்கேற்பார் என கே.எல்.ராகுல் கூறியுள்ளார்.
இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. தென்ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் முதுகுவலி காரணமாக இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி பங்கேற்கவில்லை.இதனால் அவருக்கு பதிலாக கே.ல்.ராகுல் கேப்டனாக செயல்பட்டார். இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் விராட் கோலி பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது .
இதுகுறித்து கே.எல்.ராகுல் கூறுகையில்,” விராட் கோலி தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவர் ஏற்கனவே நன்றாக இருப்பதை உணர்ந்து இருக்கிறார்.அதேசமயம் சில நாட்களாக பில்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதனால் அவர் 3-வது டெஸ்டுக்கு உடற்தகுதி பெற்று விடுவார் என நினைக்கிறேன்” என்றார் . இதேபோல் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறுகையில்,” விராட் கோலி வலைப்பயிற்சியில் நன்றாக செயல்பட்டார்” என்று அவர் தெரிவித்துள்ளார்.