தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான முதல் டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 327 ரன்கள் குவித்தது.
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் குவித்தது .இதில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 123 ரன்கள் குவித்தார். அதன்பிறகு தென்ஆப்பிரிக்கா அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. இதனால் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே தென்ஆப்ரிக்க அணியின் கேப்டன் டீன் எல்கர் பும்ராவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார் .
இதன்பிறகு களமிறங்கிய மார்க்ரம் (13), கீகன் பீட்டர்சன் (15 ), வான் டர் டுசன் (3) ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர் .இதன்பிறகு களமிறங்கிய டி காக் 34 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் 3-ம் நாள் தேநீர் இடைவேளை வரை தென்னாபிரிக்க அணி 109 ரன்களுக்குள் 5 விக்கெட் இழந்து திணறியது .