இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் இன்று தொடங்குகிறது.
இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் முதல் டெஸ்ட் போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவும், 2-வது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்நிலையில் தொடரை வெல்லப்போவது யார் என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் இன்று தொடங்குகிறது.இதுவரை தென்னாப்பிரிக்கா மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை வென்றதில்லை.
இதில் நடந்த 7 தொடரில் இந்திய அணி 6 தோல்வி , 1 டிரா கண்டுள்ளது.அதோடு கேப்டவுன் மைதானத்தில் இதுவரை 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி ஒன்றில் கூட வெற்றி பெற்றது கிடையாது. இதனால் தென்னாப்பிரிக்காவில் 8-வது முறையாக டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணி இந்த மோசமான நிலையை மாற்றி தொடரை வென்று சாதனை படைக்கும் ஆர்வத்தில் உள்ளது. அதேபோல் சொந்த மண்ணில் தொடரை இழக்காமல் இருக்க தென்னாப்பிரிக்க அணியும் முழு பலத்துடன் போட்டியில் களமிறங்கும். இதனால் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி இப்போட்டி இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது .இதனை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
உத்தேச பட்டியல்: