Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS NZ : நியூஸியை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா ….! டி20 தொடரை வென்று அசத்தல் …..!!!

நியூசிலாந்து அணிக்கெதிரான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் 73 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை கைப்பற்றியது .

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வந்தது .இதில் நடந்து முடிந்த முதல் 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வென்றது .இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 56 ரன்கள் குவித்தார்.நியூசிலாந்து அணி சார்பில் மிட்செல் சான்ட்னர் 3 விக்கெட் கைப்பற்றினார்.

இதன்பிறகு 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி விளையாடியது. இதில் தொடக்க வீரராக களமிறங்கிய மார்ட்டின் கப்தில் அபாரமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ஆனால் மறுமுனையில் இந்திய அணி பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் விக்கெட்டுகள் சரிந்தன .அதுவும் குறிப்பாக அக்சர் படேலின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து அணி தடுமாறியது. இதனால் 30 ரன்களுக்குள் 3 விக்கெட் இழந்து நியூசிலாந்து அணி திணறியது. இறுதியாக நியூசிலாந்து அணி 17.2 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இந்திய அணி தரப்பில் அக்சர் படேல் 3 விக்கெட்டும், ஹர்ஷல் படேல் 2  விக்கெட்டும் கைப்பற்றினர் .இதனால் 73 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி 3-0 என்ற கணக்கில்  தொடரை முழுமையாக கைப்பற்றியது.

Categories

Tech |