Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS ENG : முதல் பந்திலேயே நடையை கட்டிய கோலி …. அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை இழந்தது இந்தியா ….!!!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன் விராட் கோலி முதல் பந்திலேயே அட்டமிழந்து அதிர்ச்சியளித்தார் .

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் நேற்று நாட்டிங்ஹாமில் தொடங்கியது .இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது .அதன்படி முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட் இழப்பிற்கு 183 ரன்களுக்குள் சுருண்டது. இதில் அதிகபட்சமாக கேப்டன் ஜோ ரூட் அரைசதம் அடித்தார் .இந்தியா சார்பில் பும்ரா 4 விக்கெட்டும், ஷமி 3 விக்கெட்டும் கைப்பற்றினர் .இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது . இதில் முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 21 ரன்களை எடுத்திருந்தது. இதையடுத்து 2- வது நாளான இன்று இந்திய அணியில் ரோகித் சர்மா- கே.எல் . ராகுல் ஜோடி ஆட்டத்தை தொடர்ந்தனர்.

அப்போது இந்திய அணி 97 ரன்கள் எடுத்திருந்தபோது  ராபின்சன் பந்துவீச்சில்  ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார்.இதன்பிறகு களமிறங்கிய புஜாரா 4 ரன்னில்ஆட்டமிழக்க, கேப்டன் விராட் கோலி முதல் பந்திலேயே அவுட்டாகி வெளியேறினார். இதன்பிறகு களமிறங்கிய ரஹானே 5 ரன்னில் ஆட்டமிழந்தார் இதனால் இந்திய அணி அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை இழந்தது. இதையடுத்து கே.எல். ராகுலுடன் , ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்துள்ளார். இதில் கே.எல். ராகுல் ஆட்டமிழக்காமல் அரைசதம் கடந்துள்ளார் .

Categories

Tech |