Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS ENG : கே.ல்.ராகுல், ஜடேஜா அசத்தல் …. இந்தியா 95 ரன்கள் முன்னிலை….!!!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இந்திய அணி அனைத்து விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் எடுத்துள்ளது.  

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நடந்து வருகிறது .இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து . அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 183 ரன்களில் சுருண்டது. இதன்பிறகு  முதல் இன்னிங்சை தொடங்கிய  இந்திய அணி  2-ம் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் குவித்தது . இதில் கே.எல் .ராகுல் 57 ரன்களும் ,ரிஷப் பண்ட் 7 ரன்களும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இதையடுத்து இன்று 3-ம் நாள் ஆட்டத்தில் விளையாடிய ரிஷப் பண்ட் 25 ரன்னிலும் ,கே.எல். ராகுல் 84 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இதன்பிறகு களமிறங்கிய ஜடேஜா 56 ரன்களும் முகமது ஷமி 13 ரன்களும் பும்ரா 28 ரன்களும்  எடுத்தனர் .இறுதியாக இந்திய அணி அனைத்து விக்கெட் இழப்பிற்கு  278 ரன்கள் குவித்துள்ளது. இங்கிலாந்து அணி சார்பில் ராபின்சன் 5 விக்கெட்டும் ,ஜேம்ஸ் ஆண்டர்சன் 4 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 95 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ள இங்கிலாந்து அணி 2- வது இன்னிங்சை தொடங்கியது .ஆனால் மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது .

Categories

Tech |