Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS ENG : இங்கிலாந்து பறக்கவுள்ள 2 வீரர்கள் …. வெளியான புது அப்டேட் …!!!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான  முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற ஆகஸ்ட்  4-ம் தேதி தொடங்குகிறது .

விராட்கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு  எதிராக 5  டெஸ்ட் போட்டிகளில்  விளையாட உள்ளது. இதில்  இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற ஆகஸ்ட் 4-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் டெஸ்ட் போட்டிக்காக இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர், சுப்மன் கில் மற்றும்  அவேஷ் கான் ஆகியோர் காயம் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ளனர் .

இதனால் இலங்கைக்கு எதிரான தொடரில் இடம்பெற்றுள்ள பிரித்வி ஷா மற்றும் சூரிய குமார் ஆகியோர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர். இதனை ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இந்திய அணி வீரர்கள் :
ரோகித் சர்மா, மயங்க் அகர்வால், புஜாரா, விராட் கோலி (கேப்டன்) ரகானே ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட் , அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், பும்ரா, இஷாந்த் சர்மா, முகம்மது சமி, முகம்மது சிராஜ், ஷர்துல் தாகூர், உமேஷ் யாதவ், கே .எல். ராகுல், ரிதிமான் சஹா, அபிமன்யு ஈஸ்வரன், பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ்.

Categories

Tech |