இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது டெஸ்டில் முதல் இன்னிங்சில் இந்திய 78 ரன்களில் சுருண்டது .
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது . இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது . அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா -கே.எல் .ராகுல் ஜோடி களமிறங்கினர். இதில் கே .எல்.ராகுல் டக் அவுட் அதிர்ச்சி அளித்தார் .இதன் பிறகு களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். இதில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 105 பந்துகளில் 19 ரன்களை குவித்தார் .
இதனால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 40.4 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 78 ரன்களில் சுருண்டது. இங்கிலாந்து அணி சார்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஓவர்டேன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர் .இதையடுத்து ராபின்சன், சாம் கரன், தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர் .தற்போது களமிறங்கியுள்ள இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கி உள்ளது.