இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 215 ரன்கள் குவித்துள்ளது .
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 3-வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 78 ரன்களில் சுருண்டது. இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் கிரேக் ஓவர்டான் தலா 3 விக்கெட்டும் , ராபின்சன், சாம் கர்ரன் தலாஆகியோர் 2 விக்கெட்டும் கைப்பற்றினர். இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 2-ம் நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 423 ரன்களை குவித்தது.இதில் அதிகபட்சமாக கேப்டன் ஜோ ரூட் 121 ரன்கள் எடுத்தார். இந்த நிலையில் நேற்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்றது.
இறுதியாக இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டையும் 432 ரன்கள் குவித்தது. இதனால் இந்திய அணியை விட 354 ரன்கள் முன்னிலையில் இருந்தது . இந்தியா தரப்பில் முகமது ஷமி 4 விக்கெட்டும் ,சிராஜ் , ஜடேஜா மற்றும் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர். இதன் பிறகு இந்திய அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா கே.எல்.ராகுல் ஜோடி களமிறங்கினர். அணியின் ஸ்கோர் 34 ரன்கள் எடுத்திருந்தபோது கே.எல். ராகுல் 8 ரன்னில் ஆட்டமிழந்தார் இதன்பிறகு களமிறங்கிய புஜாரா ,ரோகித்துடன் இணைந்து சிறப்பான ஆட்.டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடி 82 ரன்கள் குவித்தது.
இதில் அரைசதம் கடந்த தொடக்க வீரர் ரோகித் சர்மா 59 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்பிறகு கேப்டன் விராட் கோலி ,புஜாரா உடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 3-ம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் குவித்துள்ளது .புஜாரா 91 ரன்களும் ,கேப்டன் விராட் கோலி 45 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர். இதனால் இந்தியா 139 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது .இங்கிலாந்து தரப்பில் ஆலி ராபின்சன் ,ஓவர்டோன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.