இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்நிலையில் இன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. எனவே இப்போட்டியில் இருஅணிகளும் முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின்போது நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்து வீசியதால் இரு அணிகளுக்கும் ஆட்ட ஊதியத்திலிருந்து 40% அபராதம் ஐசிசி விதித்துள்ளது. அதோடு டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளிலும் இரு அணிகளுக்கு தலா 2 புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது .