இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி பந்துவீச்சாளர் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார் .
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது .இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மாவும், கே.ல்.ராகுலும் களமிறங்கினர். இதில் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ரோகித்-ராகுல் ஜோடி வலுவான தொடக்கத்தைக் கொடுத்தது .இந்த ஜோடி 43.4 ஓவர்களில் 126 ரன்களை குவித்தது. இதில் ரோகித் சர்மா 83 ரன்களில் ஆட்டமிழக்க , அடுத்து வந்த புஜாரா 9 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதன்பிறகு களமிறங்கிய விராட் கோலி ,ராகுலுடன் ஜோடி சேர்ந்தார். இதில் அதிரடியாக விளையாடிய ராகுல் சதமடித்து அசத்தினார் .இதனால் முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 276 ரன்கள் குவித்து இருந்தது. இதில் அதிகபட்சமாக கேஎல் ராகுல் 127 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.
இந்த நிலையில் இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆனால் ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே ராபின்சன் பந்துவீச்சில் கே.எல் ராகுல் வந்த வேகத்திலேயே ஆட்டமிழந்து நடையை கட்டினார். இதன் பிறகு களமிறங்கிய வீரர்கள் இங்கிலாந்தின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய ஜடேஜா 40 ரன்கள் எடுத்தார். இதனால் இறுதியாக இந்தியா முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 364 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து அணி சார்பில் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளும் ,ராபின்சன் மற்றும் மார்க் வுட் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். ஒரு மொயீன் அலி 1 விக்கெட் கைப்பற்றினார் .இதன்பிறகு களமிறங்கியுள்ள இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கி உள்ளது.