Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS ENG முதல் டெஸ்ட் : மழையால் பறிபோன வெற்றி வாய்ப்பு …. ரசிகர்கள் ஏமாற்றம் ….!!!

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிரா ஆனது .

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்று வருகிறது .இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 183 ரன்களில் சுருண்டது. இதன் பிறகு களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 278 ரன்கள் எடுத்தது. இதன்பிறகு 95 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது. இதில் அதிகபட்சமாக கேப்டன் ஜோ ரூட் சதம் அடிக்க இங்கிலாந்து அணி 303 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இங்கிலாந்து அணி ஒட்டுமொத்தமாக 208 ரன்கள் எடுத்து முன்னிலையில் இருந்தது .இதன்பிறகு களமிறங்கிய இந்திய அணி  209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆட்டத்தை தொடங்கியது.

இதில் 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் குவித்தது . இந்த நிலையில் இன்றைய இறுதி நாள் ஆட்டத்தில் 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்க இருந்தது . ஆனால் மீண்டும்  நாட்டிங்காமில் காலையிலிருந்து மழை பெய்து வருகிறது. அதோடு தொடர்ந்து மழை பெய்து வந்ததால் போட்டி  தேநீர் இடைவேளை வரை ஆட்டம் நடைபெறவில்லை.இதன் காரணமாக  இறுதி நாள் ஆட்டம்  கைவிடப்படுவதாக அறிவிக்கபட்டுள்ளது .இதனால் போட்டி  டிராவில் முடிந்தது . இப்போட்டியில் இந்தியா வெற்றி பெற இருந்த நிலையில் மழையால் இந்த வெற்றி  பறிபோனதால்  ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது .

Categories

Tech |