Categories
உலக செய்திகள்

“பட்ஜெட் தாக்கல் செய்த பிரிட்டன் நிதியமைச்சர்!”.. சிகரெட்டின் விலை கடும் உயர்வு..!!

பிரிட்டனில் புதியதாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் சிகரெட் பாக்கெட்டின் விலை உயர்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் நிதியமைச்சர் ரிஷி சுனக், இன்று புதிய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், புகையிலை பொருட்கள் விலை அதிகரித்திருக்கிறது. ரிஷி சுனக் புகையிலை பொருள்களின் வரியை அதிகரித்ததால், இந்த விலை உயர்வு ஏற்பட்டிருக்கிறது.

இதனால், உயர்ரகத்தில் உள்ள சிகரெட் பாக்கெட்டுகளுக்கான விலை 88p-ஆக அதிகரித்திருக்கிறது. அதாவது 12.73 பவுண்டிற்கு விற்கப்பட்ட சிகரெட் பாக்கெட்டுகள், தற்போது 13.60 பவுண்ட்-ஆக அதிகரித்திருக்கிறது.

எனினும், குறைவான விலை கொண்ட சிகரெட் பாக்கெட்டுகள் வாங்கினால், அதனுடன் 63p சேர்க்கப்படுகிறது. அதாவது 9.10 பவுண்ட்டிற்கு விற்கப்பட்ட சிகரெட்டுகள், 9.73 பவுண்ட் ஆக அதிகரிக்கும். இதே போல, 30 கிராம் உடைய புகையிலை சிகரெட் 8.14 பவுண்ட்டில் இருந்து 9.02-பவுண்ட் ஆக உயரும்.

இது நேற்று மாலையிலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளது. கடந்த 10 வருடங்களில்  தற்போது, சிகரெட்டின் விலை இரு மடங்காக உயர்ந்திருக்கிறது. புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவர்கள், இந்த விலை உயர்வை எதிர்க்கிறார்கள். மேலும், இது ஒரு ஆயுத வரி விதிப்பு என்று குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும், தற்போது நாட்டில் எரிபொருள் விலை அதிகரிப்பு அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, எரிபொருள் வரி அதிகரிப்பு பட்ஜெட்டில் உயரும் என்று கூறப்படுகிறது. எனினும், முன்பு  நாங்கள் அறிவித்தது போன்று, எரிபொருள் வரி அதிகரிப்பு ரத்து செய்யப்படும் என்று Rishi Sunak பட்ஜெட் தாக்கலின் போது தெரிவித்துள்ளார்.

Categories

Tech |