இன்று ஒரே நாளில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 2848 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இன்று ஒரே நாளில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 2848 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சூழலில் இன்று அங்கு அதிக அளவில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும் நாளுக்கு நாள் டோக்கியோ நகரில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் காரணத்தால் அங்கு அவசர நிலை பிரகடனம் அமலுக்கு வந்துள்ளது.
மேலும் டோக்கியோவில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும், மருத்துவமனையில் 20.8 சதவீதம் பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிக்காக வந்திருப்பவர்களில் 7 பேருக்கு பாதிப்பு இருப்பதாக ஒலிம்பிக் அமைப்பாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் பாதிக்கப்பட்ட 7 பேரில் நான்கு பேர் விளையாட்டு வீரர்கள் என்று கூறப்படுகிறது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடப்பதால் அங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வரும் நிலையில் வீரர்கள் உட்பட 155 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.