Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை – தமிழக அரசு அறிவிப்பு!

கொரோனா ஊரடங்கின் போதும் பணிசெய்யும் நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு தமிழக அரசு ஊக்கத்தொகை அறிவித்துள்ளது. விற்பனையாளர்களுக்கு ரூ. 2500, கட்டுனர்களுக்கு ரூ. 2000 வழங்கப்படும் என அறிவித்துள்ளனர். அரசின் இந்த அறிவிப்பால் 21,517 விற்பனையாளர்கள், 3,77 பொட்டலமிடுபவர்கள் பயனடைவார்கள்.

கொரோனா நிவாரணமாக அனைத்து வகை அரிசி பெறும் ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.1,000 உதவியும், அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை ஆகியவை இலவசமாகவும் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். ஏப்., 2 ம் தேதி தொடங்கி 15ம் தேதி வரை தொடர்ச்சியாக நிவாரணம் வழங்கி முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கூட்டுறவு சங்கங்கள் மூலமாக நிவாரண தொகை பெறப்பட்டு ஒவ்வொரு நாளில் தலா 100 நபர்களுக்கு மட்டும் கூட்டமில்லாமல் நிவாரணம் வழங்கி முடிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதனால் நியாய விலைக்கடை ஊழியர்கள் பணிக்கு வர வேண்டிய நிலை இருப்பதால் அவர்களுக்கு தமிழக அரசு ஊக்கத்தொகை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |