பூஜை அறையில் நாம் என்னென்ன செய்ய வேண்டும், என்னென்ன செய்ய கூடாது என்பதை பற்றி தெரிந்துகொள்ளலாம்.
வெற்றிலைக்கு நுனியும், வாழைப் பழத்திற்கு காம்பும் இருக்க வேண்டும். வெற்றிலை பாக்குடன் சுண்ணாம்பு வைத்து பூஜை செய்யக்கூடாது . அவியல், பொரியல், கடலை மற்றும் கல்கண்டு நிவேதனம் செய்யலாம். பச்சரிசி சாதம் செய்து கடவுளுக்கு படைக்க வேண்டும்.
நாகப்பழம், மாதுளை, கொய்யா, வாழை, நெல்லி, இலந்தை, மாம்பழம், பலாப்பழம், ஆகிய பழங்கள் பூஜைக்கு ஏற்றவையல்ல. தேங்காயை உடைத்து பிறகு முடியை பிரிக்க வேண்டும். கோணலான, வழுக்கையான தேங்காய்கள் இருக்கக்கூடாது.
வழிபாட்டிற்கு முன்பாக சாம்பிராணி புகை போடுவது மிகவும் சிறந்தது. சாம்பிராணி புகை வீட்டில் உள்ள கெட்ட அதிர்வுகளை வெளியில் விரட்டும் ஆற்றல் கொண்டது. விநாயகருக்கு துளசியால் பூஜிப்பது தவறு. பெருமாளுக்கு அர்ச்சனையால் பூஜிப்பது தவறு. சிவபெருமானுக்குத் தாழம்பு ஆகாது. திருமகளுக்கு தும்பைப்பூ ஆகாது. அம்பிகைக்கு அருகம்புல் பூஜையும் உகந்தது அல்ல. வில்வம், கொன்றை, தும்பை, எருக்கு, ஊமத்தை சிவனுக்கு உரியது.
காளி அம்மன், துர்க்கை, முருகனுக்கு அரளிப் பூக்கள் உகந்தது. அருகம்புல், மல்லி, சாமந்தி பூ, ரோஜா, பன்னீர் ரோஜா, சங்கு தாமரை, மரிக்கொழுந்து, சம்பங்கி, துளசி ஆகிய மலர்களால் பூஜை செய்யலாம் என்று கூறப்படுகின்றது.
சாமந்தி போன்ற மணமில்லாத மலர்களை பூஜைக்கு ஒதுக்கி வைக்க வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் அலங்காரத்திற்கு பயன்படுத்தலாம். பூவின் இதழ்களை கொண்டு அர்ச்சனை செய்வது மிகவும் தவறு. காய்ந்து போன மற்றும் அழுகிப்போன பூக்களை சாமிக்கு வைத்து வழிபாடு செய்தால் தெய்வ குத்தமாகும். இதையே நாம் பூஜையில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் ஆகும்.