வேலைக்குச் செல்லாமல் குடித்துவிட்டு தெரியும் இளைஞனை ஊர் பெரியவர்கள் இருவர் கண்டித்ததால் ஆத்திரத்தில் இருவரையும் இளைஞன் கல்லால் அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியை அடுத்த தெப்பக்காடு கிராமத்தை சேர்ந்தவர்கள் பெரியான் மற்றும் அவரது தங்கை வெள்ளையம்மாள் இருவரும் கிராமத்தின் வெளிப்புறப் பகுதிகளில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது அவ்வழியாக குடிபோதையில் வந்த இளைஞனை இவ்வாறு வேலைக்கு போகாமல் குடிபோதையில் சுற்றித்திரிவது சரிதானா? என்று கண்டித்துள்ளனர் இதனால் ஆத்திரமடைந்த இளைஞன் இருவரையும் கல்லால் பயங்கரமாக தாக்கி கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளான்
அதன்பின் தகவலை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலைக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர் இந்நிலையில் இளைஞன் காவல் துறையினரிடம் சரணடைந்து நடந்தவற்றைக் கூறி வாக்கு மூலம் அளித்துள்ளார் வேலைக்கு செல்லாததை தட்டிக்கேட்டதால் முதியவர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது