ஐசிசி விதிகளின் படி உலகக்கோப்பை இறுதியில் மழை பெய்து ஆட்டம் தடைப்பட்டால் என்னவாகும் என்பதைக் காண்போம் .
தற்பொழுது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியானது இங்கிலாந்தில்நடைபெற்று வருகிறது. இதில்ஒருசில போட்டிகளின் போது மழை பெய்துவருவதுஅனைவருக்கும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட அணி தென் ஆப்பிரிக்க அணி ஆகத்தான் இருக்கும் ஏனென்றால் இந்த உலகக் கோப்பை போட்டியில் ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட தென்னாபிரிக்க அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்தது.
இதை தொடர்ந்து தனது நான்காவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொண்டது ஆனால் அந்த போட்டியானது மழையால் தடைப்பட்டது. இதேபோல் நேற்று இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியும் மழையால் தடைபட்டது.
ஐசிசி விதிகளின்படி ஒரு ஒருநாள் போட்டிக்கு அதன் தொடக்கத்திலிருந்து 8 மணி நேரம் ஒதுக்கப்படுகிறது. இந்தநேரங்களுக்குள் மழை நின்று விளையாடும் சூழல் அமைந்தால் அந்த போட்டி மீண்டும் நடைபெறும். இந்த நேரத்திற்குள்போட்டிநடத்த முடியாத பட்சத்தில் போட்டி ட்ராவாக கருதப்படுகிறது. அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கு மட்டும் சில விதிமுறைகள் உண்டு.
அரையிறுதி போட்டிகளில் மழை குறுக்கிட்டால் போட்டியானது அதற்க்கென ஒதுக்கப்பட்ட ரிசெர்வ் நாட்களில் தொடரும். ஆனால் ரிசெர்வ் நாட்களிலும் அரையிறுதிப் போட்டிகள் நடத்த முடியவில்லை எனில் லீக் சுற்று அல்லது காலிறுதிப் போட்டியில் இரண்டு அணிகளில் எந்த அணி முதலில் இருந்ததோ அந்த அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். அதே போல இறுதிப் போட்டியில் மழை குறுக்கிட்டால் ரிசெர்வ் நாட்களில் தொடர்ந்து நடைபெறும் ரிசெர்வ் நாளிலும் மழை பெய்தால் உலக கோப்பையை இரு அணிகளும் பகிர்ந்து கொள்வார்கள்