கடலூர் பகுதிகளில் தொடர்ந்து குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருவதால் கடலூர் மக்கள் வேதனையில் உள்ளனர்
கடலூர் நகராட்சி பகுதிகளுக்கு திருவந்திபுரம் பகுதியில் உள்ள நீர்த்தேக்க நிலையங்களில் இருந்து குடிநீர் பிரத்தியேக குழாய்கள் மூலம் எடுத்து வரப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் சமீப காலத்தில் கடலூர் நகரப்பகுதிகளில் குடிநீர் எடுத்து வரும் குழாய்களில் அவ்வபோது உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன .இந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து இரு தினங்களுக்கு முன்பு கடலூர் செம்மண்டலத்தில் பிரத்யேக குழாய் ஒன்றில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் அனைத்தும் வெளியேறி ஆறாக ஓடி வீணாகியுள்ளது.
இதனை கண்ட மக்கள் கடலூர் நகராட்சி தரப்பினரிடம் கூறியும் எந்த நடவடிக்கையும் உடனடியாக எடுக்கப்படாததால் வீணாகிய நீர் அங்கங்கே குளங்கள் போல் தேங்கி நின்று உள்ளது கோடை காலங்களில் இவ்வாறு ஏற்படுவதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சில இடங்களில் தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்பட்டு உள்ளது. தண்ணீர் பற்றாக்குறையால் சிலர் தனியார் நிறுவனங்களிடமிருந்து தண்ணீர் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்னும் நீடித்தால் மிக விரைவில் மிகப் பெரிய அளவிலான தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என்று கடலூர் மக்கள் வேதனை அளித்துள்ளனர்.