Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“கலவரத்தை தூண்டும் டிக் டாக் “இளைஞர் கைது..!!

அரியலூரில் இரு தரப்பினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில் டிக் டாக் வீடியோ வெளியிட்ட  இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இணையதள சேவையில் வளர்ச்சி மாற்றம் ஏற்பட ஏற்பட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் சேர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது. அதிலும் குறிப்பாக   சிறுவர்  முதல் பெரியவர்   வரை அனைவராலும் பயன்படுத்தப்படும் பொழுது போக்கு செயலி டிக் டாக் இதில் விளையாட்டாக வீடியோவை பதிவு செய்வது சில நேரங்களில் ஆபத்தான விளைவை ஏற்படுத்தி விடுகிறது.

Image result for ban tiktok

இந்நிலையில் அரியலூர் மாவட்டம் முதுகுளத்தூரில் இரு தரப்பினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில் இளைஞர் ஒருவர் டிக் டாக்கில் வீடியோ பதிவிட்டு இருந்தார்.இது சமூகவலைத்தளங்களில் வைரலாக   பரவி வந்த நிலையில்,இதை அறிந்த கிராம அலுவலர் சத்தியமூர்த்தி  சம்பந்தப்பட்ட இளைஞர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் இளைஞரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதன்பின் வீடியோ பதிவும் டிக் டாக் வலைதளத்தில் இருந்து நீக்கப்பட்டது.

Categories

Tech |