Categories
மாநில செய்திகள்

இந்த மாவட்டத்தில்…. இதற்கெல்லாம் தடை – அரசு திடீர் உத்தரவு…!!

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு வேலூர் மாவட்டத்தில் தடை விதித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் கொரோனா தொற்று சற்று குறைந்து வரும் நிலையில், அடுத்ததாக பிரிட்டனில் பரவிய உருமாறிய கொரோனா தற்போது தமிழகத்திற்கும் பரவி உள்ளது. இதனால் உலக நாடுகளிலேயே பெரும் அச்சம் நிலவி வருகின்றது. இந்நிலையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும் சென்னையில் கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் உணவகங்கள், கேளிக்கை விடுதிகள் போன்றவற்றில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பரவும் சூழல் நிலவுவதால் டிசம்பர் 31-ம் தேதி இரவு ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை என அறிவித்துள்ளார்.

Categories

Tech |