அமெரிக்காவில் எதிர்பாராதவிதமாக 15 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் கிளாடிட் புயல் பாதிப்பால் பலத்த மழை பெய்துள்ளது. இந்த நிலையில் துன்புறுத்தலுக்கு ஆளான மற்றும் கைவிடப்பட்ட பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று காப்பகத்திற்கு சென்று கொண்டிருந்தது. இதையடுத்து நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது அந்த பேருந்து எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானதில் 15 வாகனங்கள் அடுத்தடுத்து பயங்கரமாக மோதியுள்ளனர் .
அதில் 4 முதல் 17 வயதிற்கு உட்பட்ட 8 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதேபோல் 29 வயது நபர் ஒருவரும், அவருடைய 9 மாத கைக்குழந்தையும் மற்றொரு வாகனத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனால் அந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களுடைய குடும்பத்தினருக்கு பொதுமக்கள் அலபாமாவின் கிழக்கு மத்திய பகுதியில் உள்ள நோடாசுல்கா என்ற இடத்தில் திரளாக கூடி ஆறுதல் கூறியுள்ளனர்.