Categories
சினிமா தமிழ் சினிமா

முல்லை கதாபாத்திரத்தில்… இனிமேல் இவங்க தான்… வெளியான அறிவிப்பு..!!

பாண்டியன் ஸ்டோர் முல்லை கதாபாத்திரத்தை பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை காவியா தற்போது கையில் எடுத்துள்ளார்.

பாரதிகண்ணம்மா சீரியலில் அறிவுமணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை காவியா. தொகுப்பாளினியாக நுழைந்து தற்போது நடிப்பில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். அதற்கு காரணம் பாரதிகண்ணம்மா இவருக்கு கிடைத்த முக்கிய கதாபாத்திரம். நாயகனின் தங்கையாக நடித்த அறிவுமணி கண்ணம்மாவுக்கு முழுக்க முழுக்க ஆதரவாக இருப்பதாலேயே சீரியல் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். ஊரடங்கு தொடங்கிய காலத்தில் ஏராளமான போட்டோ ஷூட் நடத்திய பல்வேறு புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை தன்பக்கம் இழுத்துக் கொண்டார்.

அது மட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர். இந்நிலையில் காவியாவிற்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோரில் பேசும்படியான கதாபாத்திரம் கிடைத்துள்ளது. அதுமட்டுமின்றி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சித்ராவின் கதாபாத்திரத்திற்கு ரெப்ளேஸ்மெண்ட் என்று கூறப்படுகிறது. மிகவும் பொறுமையாகவும், அமைதியாகவும் இருக்கும் இவர் முல்லை கேரக்டருக்கு நன்றாக பொருந்துவார் என்று கூறப்படுகிறது. பாண்டியன் ஸ்டோர் இன் முதல்நாள் ஷூட்டிங்கில் பங்கேற்று டைரக்டரிடம் பாராட்டையும் பெற்றுள்ளார்.

Categories

Tech |