Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

நாவில்…நீர் ஊற வைக்கும்…உருளைக்கிழங்கு பிரியாணி..!!

செய்ய தேவையான பொருட்கள்:

அரிசி             – ஒரு கப்

பெரிய உருளை கிழங்கு   – 3

புதினா          –  1 கட்டு

பச்சை மிளகாய்    – 3 அல்லது 4

இஞ்சி         -சிறிதளவு

பட்டை        -சிறிதளவு

கிராம்பு       – சிறிதளவு

பொடியாக நறுக்கிய வெங்காயம்       -அரை கப்

எண்ணெய்             – தேவையான அளவு

செய்முறை:

சாதத்தை உதிரியாக வடித்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைத்து சதுரம் சதுரமாக நறுக்கிக் கொள்ளவும். புதினாவுடன் பச்சைமிளகாய், இஞ்சி, உப்பு சேர்த்து விழுதாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை ,கிராம்பு, தாளித்து அரைத்த விழுது உருளைக்கிழங்கு சேர்த்து கிளறவும். பின் வடித்த சாதம் உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும் வெங்காயத்தை எண்ணெயில் வதக்கி சேர்த்து பரிமாறவும் சுவையான உருளைக்கிழங்கு பிரியாணி தயார்.

Categories

Tech |