Categories
தேசிய செய்திகள்

ஒரேயொரு ஃபேன், ஒரு லைட்…. “ஆனால் கரண்ட் பில் ரூ 1.25 லட்சம்”… பேரதிர்ச்சியடைந்த பெண்மணி..!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஒரு பெண்ணின் வீட்டுக்கு 1.25 லட்சம் ரூபாய் மின்கட்டணம் வந்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு ஒரு பக்கம் சமானியர்களின் வாழ்க்கையை புரட்டி போட்டு வரும் நிலையில், மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவரது வீட்டுக்கு ‘கரண்ட் பில்’ மூலம் ஒரு பெரும் சோதனை வந்துள்ளது.. அதாவது மத்தியப் பிரதேசத்தின் சத்னா பகுதியைச் சேர்ந்தவர் துல்சா சோதியா என்ற பெண்..

இந்த பெண்ணின் வீட்டில் ஒரேயொரு மின்விசிறி மற்றும் ஒரு மின்விளக்கு மட்டுமே உள்ளது.  மாதா மாதம் இப்பெண்ணின் வீட்டுக்கு ரூ.100-150 வரை மட்டுமே மின் கட்டணம் வருவது வழக்கம். இந்தநிலையில், கொரோனா வைரஸ் தொற்று பரவலால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்குக்குப் பிந்தய 3 மாத காலத்திற்கான மின்கட்டணம் அவருக்கு கணக்கிடப்பட்டு, அந்தப் பில்லை மின்சார வாரிய ஊழியர்கள் துல்சாவுக்கு கொடுத்துள்ளனர்.

அந்தப் பில்லில் 1.25 லட்சம் ரூபாய் மின்கட்டணம் செலுத்த வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த பில்லைப் பார்த்து பேரதிர்ச்சியடைந்துள்ளார் துல்சா.. மேலும் கட்டண தொகையை செலுத்தா விட்டால் மின் இணைப்பை துண்டித்துவிடுவோம் எனவும் தெரிவித்துள்ளனர்.. இதையடுத்து உடனே இந்த விவகாரம் அந்தபகுதி மின்வாரிய செயற்பொறியாளரிடம் தெரிவிக்கப்பட்டது.

இந்தத் தவறு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நடந்திருக்கும்என்றும், திருத்தப்பட்ட சரியான கட்டணத்தை விரைந்து வழங்குவோம் என்றும் செயற் பொறியாளர் ஆர்.கே பாண்டே உறுதி அளித்துள்ளார்.. அதன்பிறகு தான் துல்சா சோதியா சற்று நிம்மதியடைந்தார்.

Categories

Tech |