Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பு : சிவப்பு மண்டல பகுதிகளில் தளர்வுகள் எதுவும் இல்லை!

கொரோனா தொற்று அதிகமுள்ள சிவப்பு மண்டலங்களில் கூடுதலாக சில தடைகள் விதிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக அதிகரித்து வருவதால் இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வருகின்ற மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மே 4ஆம் தேதி முதல் மே 17 ஆம் தேதி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சிவப்பு மண்டல பகுதிகளில் தளர்வுகள் எதுவும் இல்லை பச்சை, ஆரஞ்சு பகுதிகளுக்கு அதிகளவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிவப்பு, பச்சை, ஆரஞ்சு என பிரிக்கப்பட்டு அதற்கேற்ப நெறிமுறைகள் அமல்படுத்தப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது..

அதில்,  கொரோனா வைரஸ் அதிகம் உள்ள சிவப்பு மண்டலங்களில் கூடுதலாக சில தடைகள் விதிக்கப் பட்டுள்ளது, அதாவது சிவப்பு மண்டலங்களில் சைக்கிள் ரிக்ஷா, ஆட்டோ, கார் இயங்க தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பேருந்துகள், சலூன்கடைகள், அழகுநிலையங்கள் இயங்குவதற்கு வழக்கம் போல தடை தொடரும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதேபோல சிவப்பு மண்டலங்களில் இரவு 7 மணி முதல் காலை 6 மணிவரை மக்கள் வெளியே வரக்கூடாது. முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் வீட்டை விட்டு கண்டிப்பாக வெளிவரக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

Categories

Tech |