கிரீன் கானா என்ற பெயரில் ஆண்டுதோறும் 50 லட்சம் மரம் நட கானா அரசு முடிவு செய்துள்ளது.
காடுகளின் அழிப்புக்கு எதிராக பிரசாரத்தை மேற்கொள்ளும் விதமாக மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவில் இன்று ஒரே நாளில் 50 லட்சம் மரக் கன்றுகள் நடப்பட்டுள்ளது. இழந்த காடுகளை மீட்பதற்காக பசுமை கானா என்ற திட்டத்தை கையில் எடுத்த அந்நாட்டு அரசு 2024 ஆண்டுக்குள் 10 கோடி மரக்கன்றுகளை நடுவதற்கு முடிவு செய்துள்ளது.
கடந்த நூறு ஆண்டுகளில் 1.5 கோடி ஏக்கருக்கு மேலாக காடுகளை அழித்த கானா அரசு தற்பொழுது ” கிரீன் கானா” என்ற திட்டத்தின் பெயரில் 50 லட்சம் மரக்கன்றுகளை நட உள்ளது. நாட்டில் அனைவரும் இலவசமாக மரக்கன்றுகளை கொடுத்து அதை தொடர்ந்து பராமரிக்க அறிவுறுத்தியுள்ளது. மேலும் இதை ஆண்டுதோறும் பின்பற்றி இருப்பதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.