கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட உயிர்களை காவு வங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 941 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 12,380 ஆக உயர்ந்துள்ளது.
குணமடைந்தோர் எண்ணிக்கை 1,489ஆக உள்ள நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கையானது 414ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்தியாவில் 325 மாவட்டங்களில் கொரோனா தொற்று இல்லை என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் 12%, உயிரிழந்தோர் 3% ஆக உள்ளது. தற்போது வரை 2,90,401 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
நேற்று 30,043 பேருக்கு சோதனை செய்யப்பட்ட நிலையில், 26,331 சி.எம்.ஆர் ஆய்வகத்தில் மற்றும் 3,712 பேருக்கு தனியார் மருத்துவமனையிலும் சோதனை செய்யப்பட்டது. புதுச்சேரியில் உள்ள மகே மாவட்டத்தில் மாவட்டத்தில் கடந்த 28 நாட்களாக ஒரு கொரோனா நோயாளி கூட பதிவாகவில்லை என லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். ரேபிட் டெஸ்ட் கருவிகள் ஆரம்பகால நோயறிதலுக்காக பயன்படாது, உடல் சோதனை கண்காணிப்பு நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.