நடிகர் பிரித்திவிராஜ் லட்சத்தீவு விவகாரத்தில் கூறிய கருத்திற்கு எதிராக சைபர் தாக்குதல் நடக்க மலையாள திரையுலக பிரபலங்கள் அனைவரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
லட்சத்தீவில் புதிய அதிகாரி பிரபுல் கோடா பட்டேல் விதித்த மாட்டிறைச்சிக்கு தடை போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்று நட்சத்திரங்கள் தங்களது சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றன. அதுமட்டுமில்லாமல் சமூக வலைத்தளத்தில் #SaveLakshadweep ஹேஷ்டேக்கை பகிர்ந்து தனது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் பிரித்திவிராஜ் இது குறித்து ஒரு பதிவு ஒன்றை பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.
அதில் நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது பள்ளியில் இருந்து சுற்றுலா செல்வதற்கு முதன் முதலில் லட்சத்தீவு தான் சென்றேன். அதன் பிறகு இயக்குனர் சசி இயக்கத்தில் அனார்கலி படத்தில் நடிப்பதற்காக அங்கு சென்றேன். இந்த முறை இரண்டு மாதங்கள் லட்சத்தீவில் தங்கி இருந்தேன். அங்கு எனக்கு நிறைய நண்பர்களும், நினைவுகளும் உள்ளது. இதில் கிடைத்த அனுபவத்தில் என்னுடைய இயக்கத்தின் முதல் படமான லூசிபர் படப்பிடிப்பின் போது அங்கு சென்றேன்.
இப்படி எனக்கு அழகான நினைவுகள் அங்கே ஏராளமாக உள்ளது. ஆனால் அங்கு நடைபெற்றுவரும் பிரச்சனைகள் மிகுந்த வருத்தத்தை தருகிறது என்று பதிவிட்டிருந்தார். அவர் இட்ட பதிவு வைரலானதை தொடர்ந்து அவரது கருத்துக்கு எதிராக சைபர் தாக்குதல் நடக்க அவருக்கு ஆதரவாக உலகினர் திரண்டு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.