Categories
அரசியல் கரூர் மாநில செய்திகள்

“முதல் தீவிரவாதி இந்து” கமல்ஹாசன் மீது இரண்டு பிரிவில் வழக்கு பதிவு…!!

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று கூறிய கமல்ஹாசன் மீது அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் இரண்டு பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நடைபெற இருக்கும் காலியாக இருக்கும் 4 சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. 4 தொகுதிகளில் ஒன்றான அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளருக்கு ஆதரவாக கமல் பிரசாரம் செய்த போது , சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று கூறியது பெரும் சர்சையை ஏற்படுத்தியது. கமலின் இந்த பேச்சுக்கு பிஜேபி , அதிமுக உள்ளிட்ட கட்சி தலைவர்கள் கடும் கணடனம் தெரிவித்தனர். குறிப்பாக அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒருநாள் கமலின் நாக்கு அறுக்கப்படும் என்று கடுமையாக விமர்சித்தார்.

இந்நிலையில் , சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று மக்கள் நீதி மய்யம்  தலைவர் கமல்ஹாசன் பேசியது இரு சமூகத்தினரிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி இந்து முன்னணி அமைப்பின் பிரமுகர் ராமகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் கரூர் மாவட்டத்தின் அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் செயல்பட்டதாக சட்டப்பிரிவு 295 ஏ, பிரிவு 153 ஏ ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |