பாரதிகண்ணம்மா சீரியலில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. குறிப்பாக இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் தொடர்ந்து டிஆர்பியில் முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில் பாரதிகண்ணம்மா சீரியலில் அடுத்தாக நடக்கப்போவது என்ன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி இந்த சீரியலில் கர்ப்பமாக இருக்கும் அஞ்சலிக்கு வளைகாப்பு நிகழ்வு நடக்க உள்ளதாக தெரியவந்துள்ளது. இதனை கண்டறியும் வகையில் இந்த சீரியலின் வில்லி வெண்பா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஞ்சலியும் அவரும் இருக்கும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனை பார்க்கும் போது அடுத்ததாக அஞ்சலிக்கு வளைகாப்பு நிகழ்வு நடக்கப் போகிறது என்று தெரிகிறது. இந்த வீடியோவை பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
https://www.instagram.com/reel/CSed_telDEz/?utm_source=ig_web_copy_link