தாய்லாந்து நாட்டில் சிக்னலில் நின்று கொண்டிருந்த லாரியில் இருந்த கரும்பை 2 யானைகள் ரசித்து ருசித்து சுவைத்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தாய்லாந்து நாட்டின் வடக்குப் பகுதியில் இருக்கும் நகோன் சவான் என்ற இடத்தில் இரண்டு யானைகள் இடமாற்றம் செய்யப்படுவதற்காக இரு லாரிகளில் தனி தனியாக ஏற்றப்பட்டு வேறொரு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. அப்போது இடையில் சிக்னல் போடப்பட்டதால் வண்டி நிறுத்தப்பட்டது. லாரிகளில் இரண்டு யானைகளும் நின்றபடி காத்திருந்தன.
அப்போது அருகே கரும்பு லோடு ஏற்றிக் கொண்டு வந்த மற்றொரு லாரி இரண்டு யானைகளுக்கும் நடுவே வசதியாக நின்றது. அதாவது மிகவும் அருகில் நின்றது. சரி, இந்த வாய்ப்பை பயன்படுத்த வேண்டியது தான் என்று நினைத்த இரண்டு யானைகளும், தங்களுக்கு விருப்பமான கரும்பு கண்எதிரே இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைந்து போட்டி போட்டுக் கொண்டு கடித்து சுவைத்து ருசி பார்த்தன. சிக்னலில் இருந்து கரும்பு லாரி புறப்படும் வரை இரண்டு யானைகளுக்கும் நல்ல வேட்டை தான். யானைகளுக்கும் நல்ல விருந்தாக அமைந்து விட்டது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
And it's #lunch time folks! What a lovely video shared by @susantananda3. #Sugarcane feast to keep energy to levels up! #elephants pic.twitter.com/ODMZLkNJ7B
— Sourav Sanyal (@SSanyal) February 13, 2020