Categories
மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியது..!!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து கொண்டே வருகிறது.. குறிப்பாக சென்னையில் வேகமாக பரவி வருகிறது.. தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் கொரோனா வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை கடந்துள்ளது.. இதில் முதல் 50 ஆயிரம் பாதிப்பு 103 நாட்களிலும், அடுத்த  50 ஆயிரம் 16 நாட்களிலும் உறுதியாகியுள்ளது..

மார்ச் 7 முதல் ஜூன் 17 வரை 103 நாட்களில் 50,193 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் தமிழகத்தில் கடந்த 16 நாட்களில் கொரோனா 50 ஆயிரத்தை கடந்துள்ளது கொரோனா மிகவும் தீவிரமாக பரவி வருவது நன்றாக தெரிகிறது.

 

 

Categories

Tech |