ஸ்பெயின் நாட்டில் சட்டவிரோதமாக சுரங்கம் அமைத்து போதை சிகரெட் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த 20 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்பெயின் நாட்டில் மாட்டுத் தொழுவத்திற்கு கீழே 4 மீட்டர் ஆழத்தில் சுரங்கம் அமைத்து சட்டவிரோதமாக ஒரு கும்பல் போதை சிகரெட் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளது. இந்த நிலையில் அந்த சுரங்க தொழிற்சாலையில் போலீசார் அதிரடியாக சோதனையிட்டு 20 பேரை கைது செய்தனர். மேலும் அங்கிருந்த போதை சிகெரெட்டுகளையும் கைப்பற்றினர்.
இந்த சமபவம் குறித்து தகவல் வெளியிட்டுள்ள அந்நாட்டு உள்துறை அமைச்சகம், அண்டலுசியன் (Andalusian) என்ற நகரில் இருக்கும் தொழுவம் ஒன்றில் சுரங்கம் அமைத்து தடை செய்யப்பட்டுள்ள தொழிற்சாலை செயல்படுத்தப்பட்டு வந்துள்ளதாகவும், அதில் ஒரு மணி நேரத்தில் 3,500 சிகரெட்டுகளை தயாரித்து வந்ததாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் அங்கிருந்து 1,53,000 சிகரெட் பாக்கெட்டுகள், 17,600 கிலோ புகையிலை தூள் மற்றும் 144 கிலோ கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.