Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சிலம்பம் சுற்றி 10 வயது சிறுமி உலக சாதனை !!..

திருச்சி தில்லை நகர் பகுதியில் உள்ள விஸ்வநாதர் மேல்நிலைப்பள்ளியில் நேற்றைய தினம் உலக சாதனைக்கான சிலம்பம் போட்டி நடைபெற்றது இதில் தமிழகத்தில் இருந்து அனைத்து மாவட்ட பகுதிகள் மற்றும் கேரளா கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் 5 வயது முதல் 50 வயது வரையிலான போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை போட்டி நடைபெற்றது

12 மணி நேரத்திற்கும் மேல் இடைவிடாது நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஒரு மணி நேரத்திற்கு 50 பேர் என போட்டியில் 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர் இந்த போட்டியில் சுகிதா என்ற 10 வயது மாணவி தொடர்ந்து மூன்று மணி நேரம் சிலம்பம் சுற்றி நடுவர் முன்னிலையில் பாராட்டு  பெற்றுள்ளார் மேலும் ஜீனியஸ் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் என்ற இப்புத்தகத்தின் சாதனை வரிசையில் இவரது சாதனையும் இடம்பெற்றுள்ளது

Categories

Tech |