Categories
உலக செய்திகள்

சாலையில் நடந்து சென்ற சிறுமி …. சிறுவனின் செயலால் நேர்ந்த சோகம்…!!

17 வயது சிறுவன் ஓட்டி வந்த கார் மோதி சிறுமி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவில் 15 வயது சிறுமி ஒருவர் சாலையில் நடந்து சென்ற போது அந்த வழியாக வந்த காரில் மோதி பலியான சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் டெப்டன் கிராமத்தில் நடந்துள்ளது. இதைப் பற்றி காவல்துறையினர் கூறுகையில் அதிகாலை 3.30 மணிக்கு சிறுமி ஒருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக சாலையில் சென்ற கார் ஒன்று இந்த சிறுமி மீது மோதியுள்ளது.

இதில் படுகாயமடைந்த சிறுமி ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் ஆனால் சிகிச்சை பலனின்றி   பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினர் கூறும்போது சிறுமியின் மீது மோதிய காரை ஓட்டியது ஒரு 17 வயது சிறுவன் எனவும், தடயவியல் புனரமைப்பு நிபுணர்கள் உதவியுடன் இந்த சம்பவம் பற்றி பல விசாரணைகளை காவல்துறை நடத்தி வருவதாகவும்  தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |