ராஜஸ்தானில் பெண் ஒருவரை அவரது மாமனாரும், கணவரின் சகோதரனும் சேர்ந்து நாசம் செய்த அவலம் அரங்கேறியுள்ளது..
ராஜஸ்தான் மாநிலம் ஜல்ராபதானில் இருக்கும் பால்தா பகுதியில் ஒரு மாதத்திற்கு மேலாக பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த 3 பேரை ஜலாவர் போலீசார் கைது செய்துள்ளனர்.. பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் பிரதான் சிங் மற்றும் அவரது சகோதரன் மகேந்திர சிங், அவர்கள் இருவரின் தந்தை பரத் சிங் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தன்னை 4 முறை கணவரின் தந்தையும், கனவரின் சகோதரரும் பாலியல் பலாத்காரம் செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய துணைக் காவல் கண்காணிப்பாளர் கோபால் மீனா, “பாதிக்கப்பட்ட பெண்ணின் மாமனாரும், கணவரது சகோதரனும் பல தடவை அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.. இதை வெளியில் யாரிடமாவது சொன்னால் உன்னை கொலை செய்து விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்.