Categories
மாநில செய்திகள்

“அனுமதியின்றி பேனர் தயாரிக்க கூடாது”…. புதுச்சேரி முதல்வர் எச்சரிக்கை..!!

புதுச்சேரியிலும் அரசு அனுமதியின்றி பேனர், கட் அவுட் தயாரிக்க கூடாது  என உள்ளாட்சித்துறை உத்தரவிட்டுள்ளது. 

சென்னையில் 23 வயதான சுபஸ்ரீ என்ற மென்பொறியாளர் கடந்த வியாழக்கிழமை பள்ளிக்கரணை சாலை வழியாக ஸ்கூட்டரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது சாலை நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் அவர் மீது விழுந்ததில் கீழே விழுந்தார். பின்னால் வந்த லாரி அவர் மீது ஏறி இறங்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து பேனரால் உயிரிழந்த சுபஸ்ரீ  மரணம் தமிழகத்தை உலுக்கியது.

அதை தொடர்ந்து  திமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பேனர் வைக்க கூடாது என்று தொண்டர்களுக்கு அறிவுறுத்தியது. நடிகர் கமல்ஹாசன், விஜய், சூர்யா உள்ளிட்ட பிரபலங்களும் பேனர் வைக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் புதுச்சேரியிலும் பேனர் வைக்க வேண்டாம் என முதலமைச்சர்  நாராயணசாமி ஆணையிட்டுள்ளார்.

Image result for நாராயணசாமி

இதனையடுத்து அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பேனர்களை வைக்காமல் இருப்பதற்கு உள்ளாட்சித் துறை தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றது. பேனர் தடை செய்வது குறித்து உள்ளாட்சித் துறை இயக்குனர் மலர் கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், திருமண மண்டப உரிமையாளர்கள், மேலாளர்கள், டிஜிட்டல் பிரிண்டிங் உரிமையாளர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். அதன்படி இனிமேல் அரசு அனுமதி கடிதம் இன்றி பேனர்கள் தயாரித்துக் கொடுக்கும் நிறுவன உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |