Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

“இந்தியாவிற்கு வரி விதித்தது அமெரிக்கா “அமெரிக்கா அதிபருக்கு எம்.பிக்கள் கடிதம் ..!!

வளர்ந்த ,பயனடைந்த நாடு என்ற அந்தஸ்தை ரத்து செய்து ,ஏற்றுமதி பொருளுக்கு வரிகள் விதிப்பை  அமெரிக்கா உறுதி செய்துள்ளது .

2020க்குள் இந்தியா வல்லரசு நாடாக மாறும் என்று ஐந்து வருடங்களுக்கு முன்பாக கூறி வந்த நிலையில், தற்போது வளரும் நாடுகளின் பட்டியலில் இருந்தே இந்தியா வெளியேற்றப்பட்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் அமெரிக்காவானது பயனடைந்த வளர்ந்த நாடு என்ற அந்தஸ்தை இந்தியாவிற்கு வழங்கி இருந்தது. இந்நிலையில் அந்த அந்தஸ்தை அமெரிக்கா நாடு இந்தியாவிற்கு ரத்து செய்யப்போவதாகவும் ,அதனை ஜூன் 5 முதல் நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதனையடுத்து இந்திய நாடானது வரி செலுத்தாமல் எந்த பொருட்களையும் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய முடியாது என்ற கட்டுப்பாடுகளையும் விதித்து உள்ளது. இப்படிப்பட்ட நடவடிக்கை இந்தியா மீது எடுக்க வேண்டாம் என்று அமெரிக்க எம்பிக்கள் ட்ரம்ப்க்கு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |