Categories
மாநில செய்திகள்

மருத்துவ படிப்பில்… அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு…!!

நாடாளுமன்றக் கூட்டத்தில் மருத்துவப் படிப்பிற்கான உள்ஒதுக்கீடு அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் என்ற அறிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இரு நாட்களாக நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தில் பல்வேறு வகை மசோதாக்கள் எழுப்பப்பட்டு அதற்கான தீர்வுகள் தீர்மானிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்பொழுது கொரோனா விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் அபராதம் விதிக்கப்படும் என்ற மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் இன்று, அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில்  7.5 சதவீதம் உள்இட ஒதுக்கீடு பெறுவற்கான சட்ட மசோதா பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

6 ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம், ஓமியோபதி ஆகிய படிப்புகளில் இளநிலை மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீத இடஒதுக்கீடுக்கான சட்டத்தை முதலமைச்சர் எடப்பாடிபழனிசாமி பேரவையில் தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், இதில் குறிப்பாக 300 க்கும் மேற்பட்ட மருத்துவ இடங்கள் ஏழை எளிய மாணவர்களுக்கு கிடைக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.

Categories

Tech |