மங்களூருவில், பெண்ணின் ஸ்கூட்டி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் பகாயமடைந்த அந்தப்பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அதன் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், மங்களூருவிலுள்ள கத்ரி கம்ப்லாவின் அருகே சாலையில் இளம்பெண் ஒருவர் தன்னுடைய ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தார்.. அப்போது, அந்த வழியாக வேகத்தில் வந்த ஒரு கார் அந்தப் பெண்ணின் ஸ்கூட்டி மீது வேகமாக மோதியதில், அந்தப் பெண் காருக்கு அடியில் சிக்கிய நிலையில் சில மீட்டர் தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டார். பின் அக்கம் பக்கத்தினர் மற்றும் போலீசார் ஓடி வந்து காரை நகர்த்தி அப்பெண்ணை மீட்டனர்..
அதனைத்தொடர்ந்து படுகாயமடைந்த அந்தப்பெண்ணை அந்தவழியாக வந்த எம்.எல்.ஏ யு.டி. காதர் மீட்டு உடனடியாக தனியார்ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார். பின்னர் இந்தவிபத்து குறித்து போலீசார் அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்து ஆய்வு செய்தனர்.
அப்போது, அந்தப்பெண் காருக்கு அடியில் சிக்கித் தவிக்கும் காட்சிகள் பார்ப்பவர்கள் அனைவரையும் பதை பதைக்க வைக்கிறது. இந்நிலையில், அந்த வீடியோ காட்சி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த விபத்தில் காயமடைந்த பெண் 22 வயதுடைய வனிஸ்ரீ பட் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Shocking CCTV Footage of a car-scooter collision at Kadri Kambala junction in Mangalore.
A 22-year-old woman was knocked down, and dragged under the car for a few meters. The victim is admitted to a private hospital, and still in critical condition. pic.twitter.com/VylcgRQuPI
— Mangalore City (@MangaloreCity) August 8, 2020