மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 70 சதவீத நோயாளிகள் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இன்று ஒரே நாளில் 183 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பரவியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து மும்பையில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1936 ஆக உயர்ந்துள்ளது. மேலும் உயிரிழப்புகள் எண்ணிக்கை 113 ஆக உயர்ந்துள்ளது. இதை நிலையில், மஹாராஷ்டிரா மாநிலத்தில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 3,000 நெருங்குகிறது. இந்தியாவில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11,933 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதில், 10,197 பேர் தற்சமயம் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 392ஆக அதிகரித்துள்ளது.
குணமடைந்தோர் எண்ணிக்கை 1,344 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல இன்று காலை கிடைத்த தகவலின் படி, மகாராஷ்டிராவில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 2,801 ஆக அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் பாதிப்புகள் 3 ஆயிரத்தை தாண்டும் என அஞ்சப்படுகிறது. அதேசமயம், இதுவரை கொரோனா பாதித்தவர்களில் 70% நோயாளிகள் 50 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.